ஆர். எஸ். புரம்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிஆர். எஸ். புரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். சற்று வசதியானவர்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் அதிக வணிக நிறுவனங்கள் நெருக்கமாகவும் கொண்ட பகுதி இது. உழவர் சந்தை ஒன்று இங்கு செயல்படுகிறது. ஆர். எஸ். புரத்தில் மாநகராட்சி நீச்சல் குளம் ஒன்று உள்ளது. தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மாநகராட்சிக்குச் சொந்தமான கலையரங்கம் ஒன்றும் ஆர். எஸ். புரத்தில் உள்ளது. இக்கலையரங்கில், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தியதி, தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில், மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முன்னிலையில், சாலை பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

